ரூ.280 கோடிக்குப் புதிய நோட்டுகளாக மாற்றிய சசிகலா குடும்பத்தார்

ரூ.280 கோடிக்குப் புதிய நோட்டுகளாக மாற்றிய சசிகலா குடும்பத்தார்

1 mins read

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா குடும்பத்தினர் ரூ.280 கோடி (S$58 மி.) மதிப்பி லான பழைய ஐநூறு, ஆயிரம் நோட்டுகளை புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாக வரு மான வரித் துறைத் தகவல்கள் கூறுகின்றன. சசிகலா குடும்பத்தினர், உற வினர், நெருக்கமானவர்கள் வீடு கள், அலுவலகங்கள், ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம், மிடாஸ் மது பான ஆலை உட்பட 187 இடங் களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். அந்த சோதனை ஐந்தாவது நாளாக 20 இடங்களில் நேற்றும் தொடர்ந்தது. "கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் ஆயி ரக்கணக்கான சொ

த்து ஆவணங் கள், பணப் பரிமாற்றம் செய் ததற்கான தகவல்கள், கணினி வன்தட்டு, பென் டிரைவ், வங்கி ஆவணங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்," என்று வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக 'தி இந்து' செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.