இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடக்க இருப் பதால் தமிழகத்தில் திமுகவோடு பாஜக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்தி கள் உலவுகின்றன. டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்கள் சிலரும் இக்கருத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் இந்த ஊகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான ஒருவர் அந்தக் கூற்றை மறுத்து உள்ளார்.
பாஜகவோடு கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமமானது என் பதால் அக்கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஸ்டாலின் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், பாஜகவோடு உறவு வைத்துக்கொள்வது என்பது வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துவதற்குச் சமம் என்று ஸ்டாலின் கூறியதாக அவர் தெரிவித்தார். "2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் பாஜக தனித்துச் செயல்பட்டு வருவதால் வெற்றி பெற அதற்கு ஒரு நல்ல துணை தேவைப்படுகிறது. அதற்காக திமுகவை பாஜக நெருங்குகிறது

