டெங்கி ஒழிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிருப்தி

டெங்கி ஒழிப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிருப்தி

1 mins read
a77da025-f8c5-41de-abff-6ceac38375e5
-

சென்னை: டெங்கி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்துக்கு உடனடியாக ரூ.256.33 கோடி வழங்க வேண் டும் என மத்திய குழுவிடம் வைக்கப்பட்ட கோரிக்கையால் எந்தவிதப் பயனும் ஏற்பட வில்லை என தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மத்திய குழு டெங்கி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திச் சென்று ஒரு மாதம் ஆகிவிட்ட தாகவும், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தமிழக அதிகாரிகள் கூறியதாக பிரபல நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழகம் வந்த மத்திய குழுவினர் பெயரளவுக்கு மட் டுமே சென்னை, சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் டெங்கி பாதித்த பகுதி களில் ஆய்வு நடத்தினர். நாங் கள் ஏற்கெனவே செய்து வரும் வேலைகளை தீவிரப்படுத்து மாறு கூறி சென்றுவிட்டனர். மற்றபடி வேறு ஒன்றும் சொல்ல வில்லை," என அதிகாரிகள் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கி ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம்: ஊடகம்