எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு எனத் தகவல்

எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு எனத் தகவல்

1 mins read

சென்னை: களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால் தானே அரசைப் பாராட்ட முடி யும் என தமிழக ஆளுநர் பன் வாரிலால் புரோஹித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கோவையில் நடத்தி யது போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தாம் ஆய்வு மேற் கொள்ளப்போவதாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். கடந்த இரு தினங்களாக கோவையின் பல்வேறு பகுதிக ளில் ஆளுநர் பன்வாரிலால் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது அரசியல் களத்தில் சல சலப்பையும் புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மரபுகளை மீறி ஆளுநர் செயல்படுவதாக எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டி உள்ளன. ஆளும்தரப்பு ஆளுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித் துள்ளபோதிலும் அதிமுக தலை மையும் ஆளுநரின் நடவடிக் கையை ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.