'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக் கான பதிப்பில் சென்னையைச் சேர்ந்த அக்ஷயா சண்முகம் இடம்பிடித்துள்ளார். சுகாதாரத் துறையில் இளம் கண்டுபிடிப் பாளர்கள், தொழில்முனைவர்கள் என்ற வரிசையில் 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட 30 பேரில் அக்ஷயாவும் ஒருவர். உடலில் அணியக்கூடிய தொழில்நுட்பக் கருவிகள், செயற்கை நுண்ணறிவுத் திறன், நடத்தை உளவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புகைபிடிப்பது போன்ற 'போதைக்கு அடிமைப் படுத்தும் நடத்தை'க்கான தீர்வு அளிக்கும் 'லூம்' எனும் நிறு வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் 29 வயது அக்ஷயா.
சென்னையில் பயின்ற அவர் 2009ஆம் ஆண்டு உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்தார். உடலில் அணியப்படும் கருவிகளின் தொடர்பில் ஆய்வு மேற் கொண்ட அபினவ் மற்றும் வேறு சில பேராசிரியர்களுடன் சேர்ந்து 'லூம்' எனும் நிறுவனத்தை தமது முனைவர் பட்டக்கல்வியின்போது அக்ஷயா தொடங்கினார். "எங்களது கண்டுபிடிப்பு போதைக்கு அடிமையாகும் நடத் தையைக் கண்டுபிடித்து, அதில் அவர் ஈடுபடுவதைக் கணித்து அதற்கேற்ற, மருத்துவமனை களில் பரிசோதிக்கப்பட்ட மாற்றுத் தீர்வுகளைப் பரிந்துரைக்கும்," என்று அக்ஷயா குறிப்பிட்டார்.
அக்ஷயா. படம்: தமிழக ஊடகம்

