ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சி செலுத்த பாஜக முயற்சி: விளாசும் விஜயகாந்த்

ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சி செலுத்த பாஜக முயற்சி: விளாசும் விஜயகாந்த்

1 mins read

சென்னை: ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சி செலுத்த பாஜக முயற்சிப் பதாக தேமுதிக தலைவர் விஜய காந்த் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், தமிழக ஆளுநர் கோவை யில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை தமிழக நலனுக்கானது எனக் கருதி ஒருபுறம் வரவேற்றா லும், மறுபுறம் தமிழக ஆட்சி யாளரின் அவலத்தை பறைசாற்றும் விதமாகவே இக்கூட்டம் அமைந் துள்ளதாக விமர்சித்துள்ளார். "இதற்குமுன் இதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடந்த தாகத் தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட் சியை, ஓர் ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள் மாறி மாறி ஆட்சி செய்யும் நிலை உருவாகியதின் விளைவு இது. நிலையான, உறுதித் தன்மை கொண்ட ஆட்சி இல்லாததையே இந்தச் சம்பவம் காட்டுகிறது," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மட்டுமல்லா மல், தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தமிழக ஆளுநர் கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது நிர்வாகத் திறமையே இல்லாத ஓர் ஊழல் ஆட்சி எனச் சாடியுள்ளார். இதற்கிடையே பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்கும் திட்டங்க ளில் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளுநரின் ஆய்வும் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநர் மேற்கொண்ட ஆய் வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.