மாணவி புகார்: நடிகை மகன் கைது

மாணவி புகார்: நடிகை மகன் கைது

1 mins read

சென்னை: மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பிரபல நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனை சென்னை போலிசார் கைது செய்தனர். 23 வயதான அவர், தம்மை சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் பின்தொடர்ந்து துன்புறுத்துவதுடன், மிரட்டலும் விடுத்ததாக பல் மருத்துவம் படிக்கும் மாணவி போலிசில் புகார் அளித்துள்ளார். தன்னைக் காதலிக்காவிட்டால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவதாகவும் மிதுன் மிரட்டியதாக அம்மாணவி தெரிவித்துள்ளார். இதை யடுத்து செவ்வாய்க்கிழமையன்று மிதுன் கைதானார்.