தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெங்கி காய்ச்சல் பாதிப்பு: சென்னையை முந்துகிறது மதுரை

1 mins read

சென்னை: டெங்கி பாதிப்பில் சென்னையை மிஞ்சி முதலிடத்தை நோக்கி வேகமாக நகர்கிறது மதுரை. அங்கு டெங்கிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தினமும் மருத் துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளையும் ஆட்டிப் படைத்து வருகி றது டெங்கிக் காய்ச்சல். தேசிய அளவில் டெங்கிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள தாக மத்திய அரசு தெரிவித் துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை மதுரை உள்ளிட்ட மற்ற மாவட் டங்கள் பிடித்துள்ளன. இந்நிலையில் மதுரையில் டெங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படு கிறது. அங்கு தினமும் ஐநூறு பேருக்காவது டெங்கி அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

"ராஜாஜி அரசு மருத்துவமனையில் தினமும் 350க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின் றனர். கடந்த வாரம் ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் அனுமதிக் கப்பட்டதால், அம்மருத்துவமனை யில் பரபரப்பு நிலவியது. "இரவு, பகலாக மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சிகிச்சையால் மரணத்தின் வாயி லுக்குச் சென்ற ஏராளமான டெங்கி நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

ஆனால், மாநகராட்சி சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் நகர்ப் பகுதியில் டெங்கி பரவல் கட்டுக்குள் வரவில்லை," எனப் பொதுமக்கள் புலம்புவதாக தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. இதற்கிடையே டெங்கியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. எனினும் அரசுத் தரப்பிலோ டெங்கிக் காய்ச்சல் பரவல் வெகு வாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.