உலக நிறுவன தர உயர்வால் இந்தியப் பொருளியல் எழுச்சி

உலக நிறுவன தர உயர்வால் இந்தியப் பொருளியல் எழுச்சி

1 mins read

அனைத்துலக தரமதிப்பீட்டு நிறு வனமான மூடி'ஸ் முதலீட்டுச் சேவை நிறுவனம் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்குச் சான் றளித்து ள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு பெரிய தோர் ஊக்கத்தை அந்தச் சான்று ஏற்படுத்தும் என்று சொல்லப் படுகிறது. இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி நம்பகத்தன்மை குறி யீட்டை Baa3 என்பதில் இருந்து Baa2 என்னும் முன்னேறிய நிலைக்கு மூடி'ஸ் உயர்த்தியுள் ளது. பொருளியல் கண்ணோட்டத் தோடு பார்த்தால் நீண்டகால வெளிநாட்டு நாணய வங்கி வைப்புத்தரத்தை Baa3ல் இருந்து Baa2ஆகவும் நீண்டகால வெளி நாட்டு நாணய பத்திர அளவீட்டுத் தரத்தை Baa2யில் இருந்து Baa1ஆகவும் உயர்த்தியுள்ளது எனலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தரமதிப்பீட்டு நிறுவனத் தின் அங்கீகாரம் ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு அத்தி யாவசியமானது. அதனால், பொருளியல் நம் பகத்தன்மையை உயர்த்துமாறு கடந்த ஆண்டு மூடி'ஸ் நிறு வனத்தை இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஆனால், இந்தியாவின் கடன்சுமை அளவை காரணம் காட்டி அவ்வாறு செய்ய மூடி'ஸ் மறுத்துவிட்டது.