நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு கொள்ளை

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு கொள்ளை

1 mins read

செங்குன்றம்: சென்னை கொளத் தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் குமார், 37. ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த இவர் சென் னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் 'மகாலட்சுமி தங்க மாளிகை' என்ற பெயரில் நகைக் கடை நடத்திவருகிறார். இந்தக் கடையில் தங்க நகை கள், வெள்ளிப் பொருட்கள் விற் பனை, நகைகளை அடகு வைத்து பணம் தருவது மற்றும் மாதாந்திர நகைச் சீட்டுத் திட்டம் எல்லாம் நடந்துவருகின்றன.

முகேஷ் உறவினர்கள் உட் பட 5க்கும் மேற்பட்டோர் கடை யில் வேலை செய்து வருகின்ற னர். வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கடையைத் திறந்து உள்ளே சென்றபோது கடையில் கண்ணாடி அலமாரியில் வைத்து இருந்த தங்க நகைகள், வெள் ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தன. நகைப் பெட்டிகள் ஆங்காங்கே சிதறி கடையே அலங்கோலமாக மாறி கிடந்தது. நகைக்கடையின் மாடியில் உள்ள கடையின் தரையில் ஒரு துளை போட்டு மர்ம நபர்கள் அந்தத் துளை வழியாக நகைக் கடைக்குள் புகுந்து 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி ராஜஸ்தான் வரை விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.