குற்றவாளியை அடையாளம் காட்டும் செயலி

குற்றவாளியை அடையாளம் காட்டும் செயலி

1 mins read

சென்னை: குற்றவாளிகளை அடையாளம் காட்டும் கைத்தொலைபேசிச் செயலியை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலி சோதனை முறையில் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோர் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் என 12,000 பேரின் தகவல்கள் புகைப்படத்துடன் இந்தச் செயலி சர்வரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர் குற்றவாளியா என்பதை 10 விநாடிகளில் இப்போது கண்டுபிடித்துவிடலாம்.