சென்னை: தமிழ்நாட்டில் கடல் மட்டம் வரும் 2100வது ஆண்டு வாக்கில் 1 மீ. உயர்ந்தால் மாநிலத் தின் கடலோர நிலப்பகுதியில் 3,209.33 சதுர கி.மீ. நிலம் கடலுக்குள் மூழ்கிவிடும் ஆபத்து இருப்பதாக சுற்றுப்புற வல்லுநர் களும் நகரத் திட்ட வல்லுநர்களும் மாநில அரசாங்கத்தை எச்சரித்து இருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஒரு பிரிவான துணைக்கோள பயனீட்டு நிலையம் என்ற அமைப்பு 2012ல் வெளியிட்ட ஓர் ஆய்வு அறிக்கையைச் சுட்டிக் காட்டி இருக்கும் அந்த வல்லுநர் கள், தமிழக அரசாங்கத்தை வலியுறுத்தி 'கடலோர மண்டல நிர்வாக திட்டத்தை' திறம்பட அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்தத் திட்டம் நீண்டகால அடிப்படையில் மீனவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துத் தர வேண்டும் என்று கூறுகிறது. மாநில அரசு கடலோர நிலத்தை முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் அந்தத் திட்டம் வரை யறுக்கிறது.
மத்திய அரசாங்கம் 2011ல் பிறப்பித்த 'கடலோர விதிமுறை மண்டல அறிவிப்பு' என்ற உத்தர விற்கு இணங்க, கடற்கரையைக் கொண்டுள்ள ஒவ்வொரு மாநில மும் கடலோர மண்டல நிர்வாகத் திட்டத்தை 2012க்குள் தீட்டி யிருக்க வேண்டும். அத்தகைய ஒரு திட்டத்தை விரைவில் வெளி யிடப்போவதாகத் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு கடைப்பிடித்து வரும் அதன் தொழில்துறைக் கொள்கையையும் கடலோர நிலத்தைக் கண்டபடி தமிழக அரசு மீட்டு வருவதையும் வைத்துப் பார்க்கையில் அந்த அரசாங்கம் அகமதாபாத்தைத் தளமாகக் கொண்டுள்ள துணைக்கோள பயனீட்டு நிலையத்தின் எச்சரிக்கைகளில் ஒன்றைக் கூட முக்கிய மானதாகக் கருதவில்லை என்பது தெரியவருவதாக அந்த நிலையத் தின் சுற்றுப்புற ஆர்வலர் குழு ஒன்றைச் சேர்ந்த பூஜா குமார் என்பவர் செய்திளார்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
வரும் 2100ஆம் ஆண்டு வாக் கில் கடல் மட்டம் 1 மீ. உயர்ந்தால் தமிழ்நாட்டில் 231.54 சதுர கி.மீ. நெடுஞ்சாலையும் 85.66 கி.மீ. ரயில்வே அடிப்படை வசதிகளும் 497.65 சதுர கி.மீ. வயல்வெளி களும் 826 சதுர கி.மீ. கடலோர பகுதிகளும் மூழ்கிப்போய்விடும் அல்லது கடல் அலைகள் காரண மாக அரிக்கப்பட்டுவிடும் என்று அந்த நிலையத்தின் அறிக்கை முன்னுரைத்து இருக்கிறது. ஆனால் இதனை தமிழக அரசு கருத்தில்கொண்டு செயல்படு வதாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

