தொழிலதிபரின் மகள்கள் கடத்தி விடுவிப்பு

தொழிலதிபரின் மகள்கள் கடத்தி விடுவிப்பு

1 mins read

மதுரை: மதுரையில் அரிசி ஆலை நடத்திவரும் கார்த்திகைச் செல்வம், 36, என்ற தொழிலதிபரின் இரண்டு புதல்விகளான அனுஸ்ஸ்ரீ, 9, ஜெயஸ்ரீ, 5, என்ற சிறுமிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் காரில் பள்ளிக்கூடம் சென்றபோது போலிஸ் உடையில் வந்த இரண்டு பேர் காரை வழிமறித்து அதில் ஏறிக்கொண்டனர். கார் விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பைத் தாண்டிச் சென்றபோது காரை நிறுத்தி பின்புறமாக வந்துகொண்டு இருந்த தங்களது காரில் சிறுமிகள் இருவரையும் ஏற்றிக்கொண்டு அந்த போலி போலிஸ்காரர்கள் இருவரும் சென்றுவிட்டனர். காரோட்டியான பாண்டி என்பவரையும் காரையும் திருப்பி அனுப்பிவிட்டனர். உடனே பாண்டி, கார்த்திகைச்செல்வத் துடன் தொடர்புகொண்டு நடந்த தைத் தெரிவித்தார்.

இந்நிலையில், கார்த்திகைச் செல்வத்தை தொடர்புகொண்டு பேசிய கடத்தல்காரர்கள் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக கார்த்திகைச் செல்வம் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸ் வழக்குப் பதிவு செய்து சந்தேகத் தின் பேரில் கார் ஓட்டுநர் பாண் டியை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தது. சிறுமிகளை மீட்க போலிஸ் தனிப்படை அமைத்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு குழந்தைகள் இருவரையும் காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் தொழிலதிபரின் வீட்டி லிருந்து 200 அடி தொலைவில் விட்டுச் சென்றனர்.