புதுடெல்லி: டெல்லியைப் பாதித் துள்ள காற்றுத் தூய்மைக்கேட் டுக்கு வளைகுடா நாடுகளில் வீசிய புழுதிப்புயல்தான் முக்கிய காரணம் எனத் தெரியவந் துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட கடும் காற்றுத் தூய்மைக் கேட்டுக்கும் பனிமூட்டத்துக்கும் வளைகுடா நாடுகளான குவைத், ஈராக், சவூதி அரேபியா போன்ற நாடு களில் வீசிய புழுதிப்புயல்தான் முக்கிய காரணம் என்ற புதிய தகவலைப் புனேயில் செயல்படும் 'காற்றுத் தரம், வானிலை முன் னறிவிப்பு மற்றும் ஆய்வு மையம்' (சஃபர்) தெரிவித்துள்ளது. குவைத், ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் 4ஆம் தேதி வரையில் வீசிய புழுதிப்புயலால் ஏற்பட்ட நுண்ணிய தூசிகள் வளிமண்டலத்தின் மேல்பகுதிக் குச் சென்று அது டெல்லியின் மீது படர்ந்துள்ளது.
அன்றைய தினம் டெல்லி யில் உச்சகட்டமாக பிஎம் 2.5 அடர்த்தியில் ஒரு கன மீட்ட ருக்கு 640 மைக்ரோகிராம் என்ற அளவில் காற்றுத் தூய்மைக்கேடு இருந்துள்ளது. இந்தத் தூய்மைக்கேடு சுவா சம் மூலமாக நுரையீரலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும் அளவுக்கு மிக மிக நுண்ணியது. இது, மனிதர் களுக்கு குணப்படுத்த முடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதற்கிடையே புதுடெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று இந்த வார இறுதியில் நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தை நிறுத்து வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
காற்றுத் தூய்மைக்கேடு காரண மாக போட்டியில் பங்கேற்க விரும்பாதவர்கள் அவர்கள் விரும்பினால் அவர்கள் செலுத் திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். "கிட்டத்தட்ட 35,000 பேர் பங்கேற்க உள்ள மாரத்தான் ஓட் டத்தை தள்ளிப் போடவேண்டும் என்று கேட்டுள்ளோம்," என்று இந்திய மருத்துவ மையத்தின் தேசிய தலைவர் கே.கே.அகர்வால் கூறினார். டெல்லியில் கடந்த 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கடுமையான பனிமூட்டம் ஏற் பட்டது. காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியே செல்லவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்தது.

