மூடப்பட்ட நகைக் கடையால் பரபரப்பு: ரூ.75 கோடி மோசடி

மூடப்பட்ட நகைக் கடையால் பரபரப்பு: ரூ.75 கோடி மோசடி

1 mins read

சென்னை: நகைச் சீட்டுகள் என்ற பெயரில் பல ஆயிரம் பேரிடம் ரூ.75 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செய்ததாக பிரபல நகைக்கடை உரிமையாளர் கள் மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து 77 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அந்த நகைக்கடையின் உரிமையாளர்களி டம் போலிசார் விசாரணை மேற் கொண்டனர். அப்போது பணம் வசூலித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் உரிமையாளர்கள் பெயரில் ஏராளமான சொத்துகள் இருப்பதை போலிசார் கண்டுபிடித் துள்ளனர்.

அவற்றை விற்று, நகைச் சீட்டுகளுக்காகப் பணம் செலுத்திய சுமார் 21 ஆயிரம் பேருக்கு அவர்கள் செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிகிறது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த நகைக்கடைக்கு வேலூர், ஓசூர் உட்பட ஏழு இடங்களில் கிளைகள் உள்ளன. நிர்வாகத் திறமையின்றி கடந்த இரு ஆண்டுகளாக இந்த நகைக் கடை பெரும் நிதி இழப்பைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 16ஆம் தேதி இந்தக் கடைகள் அனைத்தும் திடீ ரென மூடப்பட்டதால் வாடிக்கையா ளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.