சென்னை: சசிகலா கணவர் நடரா ஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கள் சிறைத்தண்டனை சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு சொகுசுக் கார் ஒன்றை இறக்குமதி செய்ததில் ரூ.1.62 கோடி அள வுக்கு வரி ஏய்ப்பு செய்தார் என்பது நடராஜன் மீதான புகார். பழைய கார்கள் என்று கூறி, புதிய கார் களை இறக்குமதி செய்ததாக அவர் உட்பட நால்வர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் நால்வ ருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், நடரா ஜன் உட்பட குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். இதற்கிடையே நடராஜனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட தால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக சசிகலா வட்டாரத்தைச் சார்ந்தோரின் தக வல்கள் தெரிவிக்கின்றன.

