தினகரன்: எங்கள் குடும்பத்தை அழிக்க மோடி, ஜெட்லி முயற்சி

தினகரன்: எங்கள் குடும்பத்தை அழிக்க மோடி, ஜெட்லி முயற்சி

1 mins read

சென்னை: எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க பிரத மர் நரேந்திர மோடியும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் முயற்சி செய்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். பிரதமர் மீது அவர் நேரடியாகக் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சசிகலா தரப்புக்கும் பாஜக தலைமைக்கும் இடையே நேரடி மோதல் துவங்கி விட்டதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர்.

நேற்று முன்தினம் ஜெயலலிதா வின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இது சசிகலா தரப்புக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய தினகரன், பிரதமர் மோடியும் அருண் ஜெட்லியும் அரசியல் ரீதியில் தங்களைப் பழி வாங்குவதாகச் சாடினார். "தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையின் மூலம் எங்கள் குடும்பத்தைப் பழிவாங்கு கிறார்கள். அதற்காக நாங்கள் பயந்துவிட மாட்டோம். எங்கேயும் ஓடவும் மாட்டோம்.