இரு கடற்படைகளின் கூட்டுச் சதி: சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்

இரு கடற்படைகளின் கூட்டுச் சதி: சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்

1 mins read

சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் போதிய அக்கறை காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும் இது இந்திய-இலங்கைக் கடற்படைகளின் கூட்டுச் சதியோ என்ற பயத்தை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். "இந்தியக் கடலோர கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீனவர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும்," என திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.