வாஷிங்டன்: அமெரிக்காவிற்குச் செல்லும் வெளிநாட்டு கணினித் துறை ஊழியர்கள் ஹெச்1பி விசா அனுமதிச் சீட்டு பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளத்தை 60,000த்தில் இருந்து 90,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் அமெரிக்காவிற்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய கணினி ஊழி யர்களின் எண்ணிக்கை வெகு வாகக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இந்திய ஊழியர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறுகிறது இந்திய கணினித் துறை நிறுவனங்களின் கூட்டமைப் பான நேஸ்காம்.
ஆனால், கடந்தாண்டு குறைந்த அளவிலான இந்தியர் களுக்கே ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் கூறியுள்ளார். முந்தைய ஆண்டுகளில் சுமார் 70 விழுக்காட்டு இந்தியர்கள் ஹெச்1பி விசா பெற்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு வெறும் 16 விழுக்காட்டு இந்தியர்களுக்கே இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பள உயர்வு மட்டுமின்றி பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும் என்ற மாற்றமும் கொண்டு வரப் பட உள்ளது.

