வ.உ.சிதம்பரனாரை நினைவுகூர்ந்த மாணவர்கள்

வ.உ.சிதம்பரனாரை நினைவுகூர்ந்த மாணவர்கள்

1 mins read
a4175bf8-10c6-4e51-a642-4b3b4a90a4cb
-

கோவில்பட்டி: 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினர். மேலும், காகிதம் மற்றும் அட்டையிலான கப்பல்களைத் தண்ணீரில் மிதக்கவிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதி ராக சுதேசி கப்பல் விட்டவர் வ.உ.சிதம்பரனார். அவரது 81ஆவது நினைவு தினம் கோவில்பட்டியில் அனுசரிக்கப் பட்டது.

இதில் ஏராளமான மாணவர், மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களில் 60 மாணவர்கள் காகிதம், அட்டை, தெர்மாகோல் ஆகியவற்றில் கப்பல் செய்து அதில் தேசியக் கொடியை ஒட்டி ஒவ்வொருவராக தண்ணீரில் மிதக்கவிட்டனர். இதில் 15 மாணவர்கள் கப்பலில் சிறிய மோட்டார், பேட்டரி பொருத்தி தானாகச் சுழலும்படி அமைத்தி ருந்தனர். மாணவர்களில் சிலர் வ.உ.சிதம்பரனார் போல் வேடம ணிந்து நிகழ்வில் பங்கேற்றனர். பின்னர் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து அம்மாணவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசியது பார்வையா ளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாணவர்கள் காகிதக் கப்பல்களை மிதக்கவிட்டனர். படம்: ஊடகம்