மத்திய அரசிடம் கேட்ட நிதி வரவில்லை: தம்பிதுரை

மத்திய அரசிடம் கேட்ட நிதி வரவில்லை: தம்பிதுரை

1 mins read
00bc08e6-e0e9-4d5f-a31e-418cb2bda9bc
-

சிவகங்கை: மாநிலத்திற்கு அதிக அதிகாரத்தை பெறுவதன் மூலம்தான் மக்கள் நலத் திட்டங்களை அதிகள வில் செயல்படுத்த முடியும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து வரு வதாகக் கூறினார். மத்திய அரசிடம் தமிழக அமைச்சர் கள் தொடர்ந்து நிதி கேட்டு வருவ தாகக் குறிப்பிட்ட அவர், எதிர்பார்த்த நிதி இதுவரை கிடைக்கவில்லை என்றார். "பணம் வந்தால்தானே திட்டங் களை நிறைவேற்ற முடியும்?

ஆனால் பணம் வந்தபாடில்லை. "மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்துக்கு சுமார் ரூ.17,000 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல தருணங்களில் மத்திய அரசிடம் முன் வைத்தார். எனினும் எதிர்பார்த்த நிதி கிடைக்கவில்லை," என்றார் தம்பிதுரை. டெல்லிக்குச் சென்ற சமயங்களில் எல்லாம் இதுபோன்ற கோரிக்கைகளை ஜெயலலிதா முன்வைத்ததாகக் குறிப் பிட்ட அவர், அதை தாமும் நேரில் பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். "அதேபோன்று தற்போதுள்ள முதல்வரும் துணை முதல்வரும் பல் வேறு காரணங்களுக்குக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பணம் தான் வந்த பாடில்லை," என்றார் தம்பிதுரை.