சசிகலாவைப் பாதுகாக்காத ஜெயா: திவாகரன் புகார்

சசிகலாவைப் பாதுகாக்காத ஜெயா: திவாகரன் புகார்

1 mins read
95f880f6-b0f3-4bf2-9c54-fa774d2c28b1
-

சென்னை: தனது சகோதரி சசிகலாவை, காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா முழுமை யாகப் பயன்படுத்திக்கொண்ட தாக திவாகரன் கூறியுள்ளார். போயஸ் தோட்டத்தில் வரு மான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஜெயலலிதா தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். ஜெயலலிதாவை மறைமுக மாகச் சாடும் வண்ணம் திவா கரன் பேட்டி அளித்துள்ளது அதிமுக வட்டாரங்களில் சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் கடமை யைத்தான் செய்துள்ளனர் என் றும் யார் வீட்டில் வேண்டு மானாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த லாம் என்றும் அவர் தெரி வித்தார். "கடந்த 1996ஆம் ஆண்டு முதலே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருந்தார். "ஏனென்றால் ஜெயலலிதா, சசிகலாவை முழுமையாகப் ப ய ன் ப டு த் தி க்கொண் டா ர் . ஆனால் அவருக்கு எந்தவித மான பாதுகாப்பையும் வழங்கத் தவறினார்," என்றார் திவாகரன். அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது ஆதாரத்திற்காகவே ஜெயலலிதாவின் காணொளி எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தனது வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையானது இப்போது போயஸ் தோட்டத்தில் முடிந்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

திவாகரன். படம்: ஊடகம்