ஜீன்ஸ் அணிந்த மாணவனின் கால்களில் வெட்டு

ஜீன்ஸ் அணிந்த மாணவனின் கால்களில் வெட்டு

1 mins read
ef2d94e9-702f-4574-b1b2-efa8220254e2
-

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சிங்கந்தர் என்ற கிராமம் உள் ளது. இங்குள்ள பள்ளி ஒன் றில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் அனுஜ் குமார், சீருடை அழுக்காக இருந்ததால் ஜீன்ஸ் காற் சட்டை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். இதைப் பார்த்து ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர், மாணவன் அனுஜின் காற்சட் டையை கத்தரிக்கோலால் வெட் டினார். அப்போது, மாணவ னின் இரண்டு கால்களிலும் கத்தரிக்கோல் பட்டு வெட்டுக் காயம் ஏற்பட்டது. ரத்தக் காயங்களுடன் வந்த மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற் றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலிசார் விசாரித்து வருகின்றனர்.

காயங்களுடன் மாணவர் அனுஜ். படம்: இந்திய ஊடகம்