காசோலைகளுக்குத் தடை வருகிறது

காசோலைகளுக்குத் தடை வருகிறது

1 mins read

போபால்: மின்னியல் நடவடிக்கை களை ஊக்கப்படுத்தும் விதமாக வங்கிக் காசோலைகள் நிறுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்திந்திய வர்த்தகக் கூட் டமைப்பின் தலைமைச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகை யில், மத்திய அரசாங்கம் கடன் அட்டைகளை ஊக்குவிக்கவே விரும்புகிறது என்றார். அதன் ஒரு பகுதியாக வங்கிக் காசோலை களைப் பயன்படுத்தும் வசதியை அரசாங்கம் விரைவில் மீட்டுக் கொள்ளும் நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய நோட்டுகளை அச்சிட 25,000 கோடி ரூபாயையும் அவற்றைப் பாதுகாக்கும் நட வடிக்கைகளுக்கு 6,000 கோடி ரூபாயையும் அரசாங்கம் செல விட்டு உள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் 80 கோடி ஏடிஎம் கடன் அட்டைகள் உள்ள தென்றும் அவற்றில் ஐந்து விழுக் காடு மட்டுமே ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்கப் பயன்படுத்தப் படுவதாகவும் பிரவீன் கூறினார். அப்படிப் பார்த்தால் ரொக்கமற்ற மின்னியல் பரிவர்த்தனைகளுக்கே 95 விழுக்காட்டு ஏடிஎம் கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.