பொருளியல் மந்தம் நீடிக்குமாம்

பொருளியல் மந்தம் நீடிக்குமாம்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தி யாளர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலிளிக்கையில், "பணமதிப்பிழப் பால் விவசாயிகள், சிறு முதலாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை பணமதிப்பிழப்பால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரம் மெதுவாக சகஜநிலைக்கு மாறும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்ற னர். என்னைப் பொறுத்தவரை பொருளாதார மந்தநிலை அடுத்த ஓராண்டிற்கு தொடரும். இதனால் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிப்படையும்," என்றார் மன்மோகன் சிங்.