தமிழகத்தில் சசிகலா குடும்பத் துக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அதனிடமிருந்து மதுபானக் கொள்முதல் செய் வதை தமிழக அரசு நிறுவ னமான டாஸ்மாக் நிறுத்திக் கொண்டுவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள டா-ஸ்மாக் கடைகளில் விற்கப் படும் மொத்த மதுபான சரக்கு களில் நான்கில் ஒரு பகுதி மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டு வந்தது. அந்த விற்பனை மூலம் கடந்த ஆண்டு 2,700 கோடி ரூபாய் (சுமார் 561 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அளவுக்கு மிடாஸ் வர்த்தகம் புரிந்தது.
தற்போது கொள்முதல் நிறுத்திக்கொள்ளப்பட்டு விட்ட தால் அந்த வர்த்தகம் இனி இராது. அதன் மூலம் அந்த நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளில் மிடாஸ் நிறுவன சரக்குகளின் இருப்பு குறைந்த தற்கு போதுமான தயாரிப் பின்மைதான் காரணம் என்று ஒரு தகவல் கூறுகிறது. தொடர் சோதனையால் மது பானத் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டதாக அந்தத் தகவல் குறிப்பிட்டது.

