தனது நாட்டு வங்கிகளில் இந்தி யர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பண விவரங்களைப் பரிமாறிக் கொள்ள சுவிட்சர்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான தானியக்க தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற மேல வையில் அங்கம் வகிக்கும் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அரசு அமைப்புகளின் பொருளியல் விவ காரம் மற்றும் வரிகளுக்கான ஆணையமே அந்தக் குழு. சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு வைத்துள்ள இந்தியர் களின் முழு விவரங்களையும் பெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
வங்கிக் கணக்கு எண்கள், கணக்கு வைத்திருப்போரின் பெயர், அவர் பிறந்த தேதி, அவரது முகவரி, வரி அடையாள எண், இருப்பு வைக்கப்பட்டு உள்ள தொகைக்கான வட்டி, ஈவுத்தொகை, காப்பீடுகள் மூலமான வருமானம், வரவுகளின் மொத்த இருப்பு, நிதிச் சொத்து களின் விற்பனை மூலமான வரு வாய் ஆகிய விவரங்களை இந்திய அரசாங்கம் தாராளமாகப் பெற்றுக் கொள்வது விரைவில் சாத்தியப் படும். இந்தியா மட்டுமல்லாது இதர 40 நாடுகளுடனும் இதுபோன்ற ஒப்பந் தத்திற்கு சுவிஸ் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

