சென்னை: ஏறத்தாழ 46 ஆண்டு களாக தாம் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடிக்கு விடை கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது மருத்துவரின் அறி வுரைப்படி எடை குறைவான பிரேம் கொண்ட, கறுப்பு நிறமற்ற புதிய கண்ணாடியுடன் அவர் காட்சி அளிக்கிறார். இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ள கண்ணாடியாகும். கருணாநிதி என்றதுமே அவ ரது கரகரப்பான காந்தக் குரல், மஞ்சள் துண்டு, தடித்த 'பிரேம்' கொண்ட கறுப்புக் கண்ணாடி ஆகியவை சட்டென நினைவுக்கு வரும்.
கடந்த 46 ஆண்டுகளாக கறுப்புக் கண்ணாடி அணிந்து இருந்தார் அவர். ஆனால் அதன் எடை கார ணமாக அவரது நெற்றியில் கூடு தல் அழுத்தம் ஏற்படவே, கண் ணாடியை மாற்ற வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார். "கருணாநிதியின் மகன் தமி ழரசு கேட்டுக் கொண்டதற்கேற்ப எடை குறைவான பிரேமுக்கு முயற்சி செய்தோம். நாற்பது நாட் கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் வெளிநாட்டில் உள்ள நண்பர் மூலம் திமுக தலைவருக்கு ஏற்ற 'பிரேம்', கண்ணாடி கிடைத்தது," என்கிறார் சென்னையில் பிரபல தனியார் முகக் கண்ணாடி நிறுவ னத்தின் தலைமைச் செயல் இயக் குநர் சேஷன் ஜெயராமன்.

