சென்னை: தமிழக அமைச்சர்க ளுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையேயான வார்த்தைப் போர் தடித்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை சாடியுள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மீது நடிகர் கமல் கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். கற்பனை உலகை விட்டு வெளியே வர வேண்டுமானால், கமல்ஹாசன் உடனடியாக டுவிட் டர் தளத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்றார் ஜெயக் குமார். போயஸ் தோட்டத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் கமல். 'ஓர் அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே.
ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது' என்று கமல் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். "குற்றம் இருப்பதைக் கண்டுபிடித்தால் எங்களிடம் கூறுங்கள், நாங்கள் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் சொல்லியும் கேட்கவில்லை என்றால், லஞ்ச ஒழிப்புத் துறை, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டம் எனப் பல்வேறு விஷயங்கள் உள்ளன. "கற்பனையான குற்றச்சாட்டை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்திருப்பதை ஏற்க முடியாது. யார் மீது வேண்டுமானாலும் குற்றச் சாட்டை வைத்து விடலாம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண் டும்," என்று அமைச்சர் ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜெயலலிதா இருந்தபோது கமல் வாயை மூடிக் கொண்டி ருந்தார் எனவும், நாட்டை விட்டே வெளியேறப் போவதாகக் கூறி னார் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்படிக் கூறிய கமலுக்கு இப்போது முதுகெலும்பு வந்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பினார்.

