கோவில்பட்டி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத் தில் முடக்கி வைத்திருப்பது தொடர்பில் மத்திய, மாநில அரசு கள் விளக்கம் அளிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் வலி யுறுத்தி உள்ளார். கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மலேசியா வில் இருந்து இறக்குமதியான மணலுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினார். மணலை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் ரூ.38 லட்சம் வரை ஜிஎஸ்டி கட்டியதாகக் கூறும் நிலையில், அம்மணலை தூத்துக் குடி துறைமுகத்திலேயே முடக்கி வைக்கக் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "தமிழகத்தில் உள்ள பெரும் பாலான ஆற்றுப் படுகைகளில் மணலை அள்ளிக் கூறுபோட்டு விட்டார்கள். இதனால் நீர் மட்டமும் குறைந்துவிட்டது. "எனவே வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையிலான மணலை இறக்குமதி செய்து விற் பனை செய்யும் நோக்கில், மலே சியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த மணலை மக்களுக்கு விற் பனை செய்ய விடாமல் முடக்கி வைத்துள்ளனர்," என்றார் ரங்கராஜன் எம்பி.
கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகளுக்குப் பயிர்க் காப் பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே விவ சாயிகள் பல கட்டப் போராட்டங் களை நடத்தியதாகக் கூறினார். மலேசியாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்டது சிலிக்கான் மணலாக இருக்கக் கூடும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக ஆட்சேபம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

