தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றச்செயல்களை ஒடுக்க ஆந்திராவில் வானூர்திகள்

1 mins read

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் குற்றச்செயல்களை ஒடுக் கவும் இதர பல மேம்பாட்டுப் பணிகளிலும் ஆளில்லாத வானூர் திகளைத் தாராளமாக பயன் படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. வானூர்திகளைப் பயன்படுத்து வதன் மூலம் தரையில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று அந்த மாநில அரசாங்கம் நம்புகிறது. "வானூர்திகளைத் தாராளமாக பயன்படுத்துங்கள். நிர்வாகத்தை மேம்படுத்தவும் குற்றச்செயல் களைக் கண்டுபிடிக்கவும் கூட்டம் அதிகமான நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கவும் குண்டர் கும் பல்களைக் கட்டுப்படுத்தவும் சரள மான போக்குவரத்தை உறுதிப் படுத்தவும் உதவக்கூடிய வழிகளை இத்தகைய வானூர்திகளைப் பயன்படுத்தி கண்டுபிடியுங்கள்," என்று அரசாங்கம் ஆட்சியர்களுக் குத் தெரிவித்துள்ளது. ஆந்திர அரசாங்கம் அண்மை யில் நடந்த நந்தியால் இடைத் தேர்தலின்போதும் இதர அரசாங்க திட்டங்களிலும் வானூர்திகளைக் திறம்பட பயன்படுத்தியது.