இந்தியச் சிறுமி மரணம்; டெங்கி சிகிச்சை கட்டணம் $33,000

இந்தியச் சிறுமி மரணம்; டெங்கி சிகிச்சை கட்டணம் $33,000

1 mins read

இந்தியாவின் ஹரியானா மாநி லத்தில் இருக்கும் குர்கான் நகரில் செயல்படும் ஃபோர்டிஸ் என்ற தனியார் மருத்துவ மனைக்கு டெங்கி காய்ச்சல் சிகிச்சைக்காக சென்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி கடந்த ஏழு வயது சிறுமி அங்கு 15 நாள் வார்டில் இருந்தார். பிறகு அவர் வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அந்தச் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக அந்த இரண் டாவது மருத்துவமனை அறி வித்தது.

சிறுமி மாண்டது ஒருபுறம் இருக்க சிகிச்சைக்காக ரூ. 16 லட்சம் செலுத்த வேண்டும் என்று அந்தச் சிறுமியின் பெற் றோருக்கு அனுப்பிய கடிதத்தில் ஃபோர்டிஸ் மருத்துவமனை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு எதிராக விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சிறுமிக்கு அதிக விலையுள்ள மருந்துகள் கொடுக்கப்பட்டதாக வும் 660 ஊசிகள் பயன்படுத் தப்பட்டதாகவும் 2,700 கையுறை கள் பயன்படுத்தப்பட்டதாகவும் 20 பக்க கட்டணப் பட்டியலில் அந்த மருத்துவமனை தெரிவித்திருந்தது.

அத்தியா சிங் என்ற அந்தச் சிறுமியின் குடும்ப நண்பர் ஒருவர் டுவிட்டரில் சிகிச்சை கட்டணம் பற்றி தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந் தது. இதையறிந்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா, இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று டுவிட்டரில் உறுதி கூறினார்.