சென்னை: தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறைதான் அதிகளவு ஊழல்கள் நிலவும் துறை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபா கரன் தெரிவித்துள்ளார். லஞ்சம் அளிக்கவில்லை என்றால் பத்திரப் பதிவு அலுவல கத்தில் எந்த வேலையும் நடக் காது என்ற நிலையே காணப்படு வதாக அவர் கூறியுள்ளார். பத் திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வந்த அனுபவம் உள்ள அனைவரும் இக்கருத்தை ஏற் றுக் கொள்வர் என்றார் அவர். பத்திரப் பதிவு செய்ய விண் ணப்பித்து கடந்த ஆண்டு தாம் அளித்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை என்றும் அப்பத்திரங் களை திரும்ப வழங்கக் கோரிய பிறகு அவை கைக்கு வந்து சேரவில்லை என்றும் சென் னையைச் சேர்ந்த பூபதி என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை யின் போதே, பதிவாளர் அலு வலகங்களில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக நீதிபதி கிரு பாகரன் கண்டனம் தெரிவித்தார். "லஞ்சப் பணம் பெறுவது தடுக்கப்பட வேண்டும் என்ப தற்காகவே பத்திரப் பதிவு அலு வலகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அதன் பிறகு சம்பந்தப் பட்டவர்கள் நேரடியாகப் பணம் வாங்காமல் இடைத்தரகர்கள் மூலம் வசூல் நடத்தி வரு கின்றனர்.

