சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனை யில் எழுபதுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்ட றியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. போயஸ் தோட்டத்தில் நடத் தப்பட்ட சோதனையின்போது, ஜெயலலிதாவின் அறை திறக் கப்படவில்லை என்றும் தேவைப் படும் பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சசிகலா மற்றும் இளவரசியிடம் விசா ரணை நடத்தப்படும் என்றும் வருமான வரித்துறை கூறி உள்ளது. உறுதியான தகவலின் அடிப் படையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் போயஸ் தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்திருப்பதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவு கிறது. அண்மையில் சசிகலாவின் உறவினர்களுடன் தொடர்பு டைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதி ரடி சோதனை மேற்கொண்டனர். போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய் தனர் என்பதே அவர்கள் மீதான புகார்.
நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா, இளவரசி. கோப்புப் படம்: ஊடகம்

