ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

1 mins read

ஜம்மு: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் காலம் மாறி கொள்ளையர்கள் தற்போது ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ஷோஃபியான் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையர்கள் அப்படியே பெயர்த்தெடுத்துச் சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் ஏடிஎம் மையத்துக்குள் ஏடிஎம் இயந்திரமே இல்லாமல் இருப்பதையும் பாதுகாப்புக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.