சென்னை: கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், திரைப்படத் தயாரிப்பாளர் களுக்கு ஆரோக்கியமான சூழல் உருவாக பாடுபட்டுக் கொண்டி ருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரபல நடிகரும் இயக்குநரு மான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த சில ஆண் டுகளாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடன் நெருக்கடி காரணமாக அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அவரது இந்த திடீர் மரணம் தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு முன்னர் அசோக் குமார் எழுதிய கடிதம் ஒன்றை போலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், படத் தயாரிப்புக்காக மதுரையைச் சேர்ந்த அன்புச்செழி யனிடம் கடன் வாங்கியதாகவும் அதற்கு கந்துவட்டி வசூலிக்கப்பட் டதாகவும் அசோக்குமார் குறிப் பிட்டுள்ளார்.

