சிங்கப்பூருடன் போட்டியிடலாம்: அன்புமணி நம்பிக்கை

சிங்கப்பூருடன் போட்டியிடலாம்: அன்புமணி நம்பிக்கை

1 mins read

சென்னை: தமிழக ஆட்சி யாளர்கள் உறுதியளித்தபடி உள்கட்டமைப்பு மேம்பாட் டுக்காக அடுத்த 6 ஆண் டுகளில் ரூ.16.27 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டால், சிங்கப்பூரு டன் போட்டியிடும் அள வுக்கு தமிழக உள்கட்ட மைப்பு வசதி மேம்படும் என்பதில் ஐயமில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். எனினும், அந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கான வசதியோ, முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனோ தமிழக அரசுக்கு உள்ளதா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி என்றும் அவர் கூறினார்.