சென்னை: தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கப்பட இருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலும் துறைமுகத்திலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 8 மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் பழனிசாமி. இதில் மணல் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து கரூரில் 8 குவாரிகள், நாகையில் 4 குவாரிகள் என மொத்தம் 70 குவாரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எழுபது புதிய மணல் குவாரிகள்
1 mins read

