சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து ஓராண்டாகிவிட்டது. பிரதிநிதிகள் இல்லாததால் மத்திய அரசு வழங்கும் நிதி உள்ளாட்சிகளுக்குக் கிடைக்கவில்லை. இதனால் வளர்ச்சித் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ரூ.3,500 கோடி திட்டங்கள் பாதிப்பு
1 mins read

