பாமக: கந்துவட்டியை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாமக: கந்துவட்டியை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 mins read

சென்னை: கந்து வட்டியை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள் ளார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைக் கூறியுள்ளார். கந்துவட்டிக் கொடுமைக்கு திரைத்துறையினரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். படத் தயாரிப்புக்காக கந்துவட்டிக்குக் கடன் கொடுத்த அன்புச்செழியன் என்ற கந்துவட்டிக்காரர் அவ மானப் படுத்தியதால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அசோக் குமார் என்ற தயாரிப் பாளர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பார்ப்பதற்கு பகட்டாகத் தெரியும் திரைத்துறையில் இருட்டு நிகழ்வுகளுக்கு இது ஒரு உதாரணமாகும். தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற் கொலைக்குக் காரணம் கந்து வட்டி தான் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரிந்திருந்தா லும் அதற்கு காரணமானவர் மீது கந்துவட்டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.