சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பெய்து வரு கிறது. குமரிக்கடல் முதல் கோவளம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. மேலும் அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இது எந்தத் திசை நோக்கி செல்லும் என்று இப்போது கணிக்க முடியாது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் 11 செ.மீ.மழை பெய்துள்ளது. 2 நாட்கள் சில இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது. 24, 25ஆம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களை விடத் தென் மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை மையம்
1 mins read

