கன்னியாகுமரி: ரூ.2,000 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபரின் 33 வங்கிக் கணக்கு களை பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் முடக்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மத்தம்பாளை என்ற இடத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2,000 கோடி மோசடி செய்த நிர்மலிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவருக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஏற்கெனவே முடக் கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவரது பெய ரிலுள்ள 33 வங்கிக் கணக்குகள் மற்றும் அவற்றிலிருந்த ரூ.2 கோடியும் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.2,000 கோடி மோசடி: நிறுவன அதிபரின் 33 வங்கிக் கணக்குகள் முடக்கம்
1 mins read

