சென்னை: தமிழ் வழியில் படித் தோருக்கு அரசு வேலை வாய்ப் பில் 20% முன்னுரிமை வழங் கும் அரசாணையை முழுமை யாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத் தரவைப் பிறப்பித்தது. தான் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும் எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனுத் தாக்கல் செய்தார்.
தமிழ் மொழியில் கற்றோருக்கு 20% முன்னுரிமை தொடர உத்தரவு
1 mins read

