தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

1 mins read

மேட்டுப்பாளையம்: கடந்த ஆண்டு நவம்பர் 24ல் அஜிதா, குப்புதேவ ராஜ் என்னும் இரு மாவோயிஸ்டு கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டு களின் நினைவு தினமான நேற்று ஆயுதப் பயிற்சி பெற்ற மாவோ யிஸ்டுகள் தமிழக-கேரள எல்லை யில் உள்ள வனத்துறை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடி களைத் தாக்கக்கூடும் என கேரள உளவுத்துறை பேலிசார் தகவல் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர், மேட்டுப்பாளையத்தை அடுத்த பில்லூர், கோப்பனாரி மற்றும் கோவையை அடுத்த ஆனைக் கட்டி பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கோவையை ஒட்டி யுள்ள வனப்பகுதியில் தமிழக போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.