சென்னை: சென்னை அருகே முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் கணவன், மனைவி, மகள் ஆகிய மூவர் மாண்டனர். இருவர் காயமடைந்தனர். ரெட்ஹில்ஸ் அருகே நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து காவல்துறை அதி காரி ஒருவர் தெரிவிக்கையில், "ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொளத் தூரைச் சேர்ந்த பழனி என்ப வரது குடும்பத்தினர் மீஞ்சூரில் தங்கள் உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு இன் னோவா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
"வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த கார் ரெட் ஹில்ஸ் அருகே உள்ள கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் விரைவாகச் சென்றுகொண்டிருந் தது. பாலத்தைக் கட்டும் நிறு வனம் அங்கே தடுப்புகள் எதை யும் அமைக்காததால் ஓட்டுநருக்கு மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாதது பற்றித் தெரியவில்லை. இதனால், மேம்பாலத்தில் மற் றொரு முனைக்குச் சென்ற கார் தொடர்ந்து செல்ல வழியில்லாமல் மேம்பாலத்தில் இருந்து 30 அடி கீழே இருந்த பள்ளத்தில் விழுந் தது.
முப்பது அடி உயரத்தில் இருந்து தலை குப்புற விழுந்த கார். சம்பவ இடத்திலேயே மூவர் மாண் டனர். இருவர் படுகாயமடைந் தனர். வேலை நடக்கும் பாலத் தில் தடுப்பு அமைக்காதது ஏன் என்று விசாரிக்கப் பட்டு வருகிறது. படம்: தமிழக ஊடகம்

