தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியான சென்னை ராதா கிருஷ்ணன் நகர் (ஆர்கே நகர்) தொகுதிக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானால் ஆறு மாதத்திற்குள் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, ஆர்கே நகர் தொகு திக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப் பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, டிசம்பர் 21ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கு கிறது. டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதற் கான கடைசி நாள். டிசம்பர் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறி விக்கப்படும்.

