புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கட்டிப்பிடி அரசியலை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தோல்வி யடைந்துவிட்டது என்று டுவிட்டர் பதிவில் சாடியுள்ளார். பாகிஸ்தானில் வீட்டுக் காவலி லிருந்த பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ராகுல், மோடியின் அர சியல் தந்திரங்கள் பலிக்கவில் லை என்றார். கடந்த 2008ஆம் ஆண்டின் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பின் தலை வரான ஹஃபீஸ் சயீத்தை விடு விக்க அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திரு மோடியின் அரசியல் தந்திரங்கள் தோல்வி யடைந்துவிட்டதாக ராகுல் கூறி யுள்ளார். சென்ற ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் டோனல்ட் டிரம்பை சந்தித்த நரேந்திர மோடி மூன்று முறை கட்டிப்பிடித்தார். இதைச்சுட்டிக்காட்டியே ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கிண்ட லடித்துள்ளார்.
குஜராத்தில் பேராசிரியர் ஒருவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி. படம்: இணையம்

