புதுடெல்லி: உத்தரகண்ட் மாநிலத் தில் நகைகளுடன் மணமகள் ஓடிய சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அம்மாநிலத்தில் ரூர்கியின் குவான் ஹீடி கிராமத்தைச் சேர்ந்த அஜய் தியாகி என்ற விவசாயிக்கும் டேராடூனைச் சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சய மானது. இதையடுத்து உத்தரப்பிரதேசம் அருகே உள்ள குவான் ஹீடியில் கடந்த 22ஆம் தேதி அன்று இரு வருக்கும் திருமணம் நடைபெற் றது. திருமணத்திற்காக மண மகளுக்கு மணமகன் வீட்டார் தங்க வெள்ளி நகைகளை அணி வித்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மறுநாள் மணமகள் கயா தனக்கு உடல் நலம் சரியில் லை என்று கூறினார். இதனால் கணவர் தியாகி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மணமகளை பரி சோதித்த மருத்துவர் சில மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்து உள்ளார். பின்னர் தம்பதியர் வீடு திரும்பினர். வரும் வழியில் கயா தனக்குக் கோழிக்கறி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அருகில் அசைவ உணவகங்கள் எதுவும் இல்லாததால் உத்தரப்பிரதேசம் எல்லையோரம் உள்ள புர்காசி என்ற நகருக்குச் சென்றனர். அங்கு போனதும் புதுப்பெண் கயா குளிர்பானம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் குளிர்பானம் வாங்கிக்கொண்டு திரும்பியபோது அங்கிருந்த மண மகள் கயாவை காணவில்லை.
மணமகள் கயாவுடன் தியாகி. கோப்புப் படம்: இந்திய ஊடகம்

