தமிழ் வளர்க்க உருவாகும் குறும்படங்கள்

தமிழ் வளர்க்க உருவாகும் குறும்படங்கள்

1 mins read

சென்னை: வட்டார வழக்கு பேச் சால் தமிழ் மொழியின் உச்சரிப்பு சிதைந்துள்ளதாக குறும்பட இயக் குநர் அமலன் ஜெரோம் கூறி உள்ளார். தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் குறும் படங்கள் தயாராகி வருவதாகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற் கான ஏற்பாடுகளைச் செய்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார். "தமிழ் வார்த்தைகளைச் சரி யாக உச்சரிக்க, எழுத தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப இயற்கை, பண்பாடு, மதிப்பீடுகள் சார்ந்து பல்வேறு தலைப்புகளில் குறும்படங்கள் தயார் செய்யப்படுகின்றன. "இதற்காக பள்ளி மாணவர் களுக்குப் பயிற்சிகள் அளிக்கப் பட்டு, எளிய முறையில் பாடல் களாக, நாடகங்களாகத் தயாரிக்கி றோம்.

இதன் மூலம் தமிழை 30 நாட்களில் எளிதாகப் புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்," என் றார் அமலன் ஜெரோம். அனைத்து குறும்படங்களும் பத்து முதல் பனிரெண்டு நிமிடங்களுக்குட்பட்ட குறும்படங் களாகத் தயாராவதாகக் குறிப் பிட்ட அவர், 'உலகெலாம் தமிழ்' என்னும் பொதுத் தலைப்பில் இவை வெளியிடப்படும் என்றார். "அண்மையில் மதுரை திரு மலை நாயக்கர் மகாலில் 'ர், ற்' ஆகிய இரு வார்த்தைகளின் உச்சரிப்பு குறித்து ஓர் அரசரவை காட்சியும் நடனமும் படமாக்கப் பட்டன. இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.