ராமேசுவரம்: இலங்கை வழியாக சீனாவுக்கு கடத்தப்பட இருந்த செம்மரக் கட்டைகளை மண்டபம் பகுதி அருகே உள்ள முயல் தீவில் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவை கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். செம்மரக் கட்டைகள் முயல் தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவுக்குக் கடத்த இருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்
1 mins read

